/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வயநாட்டில் நக்சல்கள் முகாம் கண்டுபிடிப்பு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வயநாட்டில் நக்சல்கள் முகாம் கண்டுபிடிப்பு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்
வயநாட்டில் நக்சல்கள் முகாம் கண்டுபிடிப்பு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்
வயநாட்டில் நக்சல்கள் முகாம் கண்டுபிடிப்பு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்
வயநாட்டில் நக்சல்கள் முகாம் கண்டுபிடிப்பு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்
ADDED : ஜூலை 10, 2024 08:38 PM

பந்தலுார்:தமிழக எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் அங்கு வந்த நக்சல்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜூன், 26ல் மக்கிமலை என்ற இடத்தில், வனப்பகுதியில் போலீசார் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
இந்நிலையில், மானந்தவாடி அருகே தலப்புலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வனப்பகுதியில், எஸ்.பி., பிஜூராஜ் தலைமையில் போலீசார் கடந்த இரு நாட்களாக ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு, நக்சல்கள் தங்கியிருந்த குடில் மற்றும் சீருடைகள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அங்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்த பின்பு, பொருட்களை போலீசார் எடுத்தனர். மேலும், அரசுக்கு எதிராக எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிடைத்தன.
கேரள போலீசார் கூறுகையில், 'தமிழக - கேரள எல்லையில், நக்சல்கள் தங்கி இருந்த கூடாரங்களை போலீசார் கண்டுபிடித்ததால், அவர்கள் கர்நாடகா அல்லது தமிழக எல்லையை ஒட்டிய வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
'இதனால், தமிழக - கர்நாடக அதிரடிப்படை போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்' என்றனர்.