/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழத்தோட்டத்தில் உலா வரும் கரடிகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல் பழத்தோட்டத்தில் உலா வரும் கரடிகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
பழத்தோட்டத்தில் உலா வரும் கரடிகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
பழத்தோட்டத்தில் உலா வரும் கரடிகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
பழத்தோட்டத்தில் உலா வரும் கரடிகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 05:50 PM
குன்னுார் : குன்னுார் பழத்தோட்டம் பகுதியில் உலா வரும் ஐந்துக்கும் மேற்பட்ட கரடிகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் அருகே வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுகளை தேடி வருவது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் உபதலை அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடிகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து பூட்டியிருக்கும் வீடுகளில் கதவுகளை உடைத்து பொருட்களை சேதம் செய்து வருகின்றன. குறிப்பாக கோவில்களில் எண்ணெய் உட்கொள்ள அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில்,''சமீபத்தில் கூண்டு வைத்து ஒரு கரடியை மட்டும் பிடித்து. யாருக்கும் தெரியாமல் வனத்துறையினர் எடுத்து சென்றனர். தொடர்ந்து மற்ற கரடிகளின் நடமாட்டம் அதிகரித்த போதும், மீண்டும் இங்கு கூண்டு வைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது வேறு இடங்களிலும் கரடிகள் நடமாட்டம் உள்ள நிலையில் உலிக்கல் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உணவு கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த பகுதியில் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.