/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்
பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்
பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்
பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்
ADDED : மார் 11, 2025 10:45 PM

கோத்தகிரி; 'கோத்தகிரி கொந்தொரை பகுதியில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை, உடனுக்குடன் அகற்ற வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி துறையுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தந்த ஊராட்சிகளில், அன்றாடம் சேகரமாகும் குப்பை மேலாண்மை செய்யப்படுகிறது. அதன்படி, மட்கும், மட்காத குப்பை தனியாக தரம் பிரித்து கையாளப்படுகிறது. அதில், மட்கும் குப்பைகள் உரமாகவும், மட்காத குப்பை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்படி, ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கொந்தொரை கிராமத்தில், அதற்கான கிடங்கில் மட்காத பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்களாகியும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாத நிலையில், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தேங்கியுள்ள மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.