/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வாழ்க்கையில் வெற்றிபெற ஒழுக்கம் அவசியம்; அரசு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை வாழ்க்கையில் வெற்றிபெற ஒழுக்கம் அவசியம்; அரசு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
வாழ்க்கையில் வெற்றிபெற ஒழுக்கம் அவசியம்; அரசு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
வாழ்க்கையில் வெற்றிபெற ஒழுக்கம் அவசியம்; அரசு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
வாழ்க்கையில் வெற்றிபெற ஒழுக்கம் அவசியம்; அரசு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
ADDED : மார் 11, 2025 10:45 PM

கோத்தகிரி; 'வாழ்க்கையில் வெற்றி பெற, கல்வி பாடத்துடன், ஒழுக்கமும் அவசியம்,' என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி ஒன்னதலை அரசு ஆங்கில வழி துவக்க பள்ளியில், 9 வது பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. கிராம கல்வி குழு தலைவர் பெள்ளா கவுடர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் ராமன் பேசுகையில், ''பள்ளி கல்வி காலத்தில் சந்தேகங்கள் இருப்பின், மாணவர்கள் அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கமும், நேர்மையும் சேர்ந்துவிட்டால், மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும். பாடக் கல்வியுடன், பள்ளி பருவத்தில் தேக பயிற்சி அதிமுக்கியம். இதனை பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். தவிர, மாணவர்களின் சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் அவ்வப்போது, விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆசிரியர் மணி, கணித பேராசிரியர் ஆல்துரை, முன்னாள் தேயிலை வாரிய துணை இயக்குனர் குமரன், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவதி உட்பட, பலர் பங்கேற்றனர். ஆசிரியை சுமித்ரா வரவேற்றார். பள்ளி ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.