Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளியில் மரக்கன்று நடவு; மாணவர்கள் ஆர்வம்

பள்ளியில் மரக்கன்று நடவு; மாணவர்கள் ஆர்வம்

பள்ளியில் மரக்கன்று நடவு; மாணவர்கள் ஆர்வம்

பள்ளியில் மரக்கன்று நடவு; மாணவர்கள் ஆர்வம்

ADDED : ஜூன் 05, 2024 08:30 PM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

கூடலுார் புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து, 'உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதன் அவசியம்,' குறித்து விளக்கினார்.

தாவர ஆய்வாளர் சுந்தரேசன், 'தாவரங்களின் வகைகள்; அதன் பாதுகாப்பு' குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, 'வானவியல் பால பாடம், வானவியல் வினாக்களும் விடைகளும்' என, இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வனத்துறை சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிவாசகம், வானவர்கள வீரமணி, குமரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us