/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அந்தோணியார் குருசடி120வது ஆண்டு தேர் பவனி அந்தோணியார் குருசடி120வது ஆண்டு தேர் பவனி
அந்தோணியார் குருசடி120வது ஆண்டு தேர் பவனி
அந்தோணியார் குருசடி120வது ஆண்டு தேர் பவனி
அந்தோணியார் குருசடி120வது ஆண்டு தேர் பவனி
ADDED : ஜூன் 05, 2024 08:29 PM

குன்னுார் : குன்னுார் பேரக்ஸ், சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடியின், 120வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
கடந்த மாதம், 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடந்தன. தினமும் மாலை, 6:30 மணிக்கு நவநாள் நிகழ்ச்சி நடந்தது. திருநாள் சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, அன்பின் உணவு, நவநாள், புனித சுரூபம் அலங்கார தேர் பவனி ஆகியவை நடந்தன.
இதில், செண்டை மேளம் முழங்க இரு சப்பரங்களில் புனித அந்தோணியார், மாதா மற்றும் செபஸ்தியார் பவனியாக வந்தனர். எம்.ஆர்.சி., எம்.எச்., வழியாக சென்ற ஊர்வலம் குருசடியை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை குருசடி பங்கு தந்தை, உதவிப் பங்குத் தந்தையர், புனித அந்தோணியார் பஜனை சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.