/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கல்லுாரி வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு கல்லுாரி வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு
கல்லுாரி வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு
கல்லுாரி வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு
கல்லுாரி வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு
ADDED : ஜூன் 20, 2024 05:19 AM

குன்னுார், : குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் அன்னிய தாவரங்களை அகற்றவும், அந்த பகுதிகளில் சோலை மர நாற்றுக்களை நடவும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி சுற்றுப்புற பகுதிகளில் இருந்த யூகலிப்டஸ் மரங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் நேற்று குன்னுார் வனத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ஷீலா உட்பட பேராசிரியைகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''கல்லூரி வளாகத்தில், கல் நாவல், விக்கி பெருநாவல், பந்துக்காய், தீக்குச்சி மரம், லாக்கோட் பழ மரம் உள்ளிட்ட வகைகளில், 250 மர கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இவற்றை கல்லுாரி மாணவியர் தொடர்ந்து பராமரித்து வளர்க்க வேண்டும்,'' என்றார்.