/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிரம்பி வழியும் சாக்கடை அகற்றப்படாத குப்பை நிரம்பி வழியும் சாக்கடை அகற்றப்படாத குப்பை
நிரம்பி வழியும் சாக்கடை அகற்றப்படாத குப்பை
நிரம்பி வழியும் சாக்கடை அகற்றப்படாத குப்பை
நிரம்பி வழியும் சாக்கடை அகற்றப்படாத குப்பை
ADDED : ஜூன் 20, 2024 05:18 AM

அன்னுார், : அன்னுார் அருகே அகற்றப்படாத குப்பை மற்றும் சாக்கடை கழிவுநீரால் மக்கள் தவிக்கின்றனர்.
அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், ஒட்டர் பாளையம் பிரிவில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஜீவா நகர், அழகாபுரி நகர், ஆதவன் நகர் என மூன்று நகரின் கழிவுநீர் இந்த சாலை வழியாக செல்கிறது. ஆனால் இங்குள்ள சிறிய பாலத்தின் கீழே குப்பைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகரித்துள்ளது.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், '700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளி அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலை ஓரத்தில் குப்பை மலை போல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்றவும் குப்பைகளை இங்கு கொட்டாமல் இருக்கவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.