/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுகாதாரமற்ற முறையில் பானி பூரி ஒன்பது கடைகளுக்கு அபராதம் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி ஒன்பது கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்ற முறையில் பானி பூரி ஒன்பது கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்ற முறையில் பானி பூரி ஒன்பது கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்ற முறையில் பானி பூரி ஒன்பது கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 16, 2024 11:07 PM
ஊட்டி:ஊட்டி, குன்னுாரில், 9 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்து விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக முழுவதும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்தால் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரியில், மாவட்ட நியமன அதிகாரி சுரேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள், ஊட்டி, குன்னுார் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.
அதில், ஊட்டியில் மூன்று கடைகளிலும், குன்னுாரில் ஆறு கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், தலா, 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ''உணவு பொருள்களில் தேவையில்லாத ரசாயனம் மற்றும் நிறமிகளை கலப்படம் செய்யக்கூடாது. இதனால், உணவு உட்கொள்வதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படும். திடீர் ஆய்வு நடத்தி இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.