Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ADDED : ஜூலை 16, 2024 11:08 PM


Google News
அன்னூர்:அன்னூர் வட்டாரத்தில், மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்கி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

பொகலூர் நடுநிலைப் பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் சதீஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பங்கேற்றனர். காமராஜர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நல்லிசெட்டிபாளையம் தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சுசீலா தலைமை வகித்தார். நேரு இளைஞர் மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் காமராஜரின் கல்விப் பணி குறித்து பேசினார். செயலாளர் சண்முகம் இனிப்பு வழங்கினார். ஆசிரியை மாலதி மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் இரண்டு அணிகளாக கொண்டாடினர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அணியினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிச்சாமி தலைமையில் பயணியர் மாளிகை முன்பு கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் சாந்தலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மற்றொரு அணியினர் நகரத் தலைவர் அறிவழகன் தலைமையில் பயனியர் மாளிகை முன்பு காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடினர். சிறுபான்மை அணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், முன்னாள் ஊராட்சி தலைவர் பாப்பண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அக்கரை செங்கப்பள்ளியில், வட்டாரத் தலைவர் கதிர்வேல் தலைமையில் விழா நடந்தது. காங். ஓ.பி.சி., அணி மாநில செயல் தலைவர் பழனிச்சாமி தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. மாநிலச் செயலாளர் செயலாளர் செந்தாமரைக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us