/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய மினி பஸ்கள் கிராமப்புற பயணிகளுக்கு சிரமம் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய மினி பஸ்கள் கிராமப்புற பயணிகளுக்கு சிரமம்
பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய மினி பஸ்கள் கிராமப்புற பயணிகளுக்கு சிரமம்
பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய மினி பஸ்கள் கிராமப்புற பயணிகளுக்கு சிரமம்
பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய மினி பஸ்கள் கிராமப்புற பயணிகளுக்கு சிரமம்
ADDED : ஜூலை 16, 2024 01:25 AM

குன்னுார்;குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் மினி பஸ்கள் நிறுத்தியதால் அரசு பஸ்களில் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆடர்லி, காட்டேரி கீழ்குந்தா, கன்னேரி மந்தனை, சட்டன், துாதுார்மட்டம், ஆர்செடின், கொலக்கம்பை உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் நேற்று காலை திடீரென அனைத்து மினிபஸ்களும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு டிரைவர்கள் சென்று விட்டனர். இதனால் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அங்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், செய்வதறியாமல் திணறினர்.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், போலீசாரின் விழிப்புணர்வு கூட்டத்திற்கு, டிரைவர்கள் அனைவரும் சென்றதால் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தி சென்றதாக தெரியவந்தது.
பயணிகள் கூறுகையில், 'மினி பஸ்கள் நிறுத்த ஏற்கனவே சாமன்னா பார்க் பகுதியில் இடம் ஒதுக்கிய நிலையிலும், இந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதி சாலையில் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால், ஏற்கனவே போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், தற்போது கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தும் இடங்களில் மினி பஸ்களை நிறுத்துவதால் அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக மழை காலங்களில் நனைந்து கொண்டே பஸ்சில் ஏறும் நிலை ஏற்படுகிறது,' என்றனர்.