/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை
வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை
வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை
வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை
ADDED : ஜூலை 16, 2024 01:26 AM
கூடலுார்;கூடலுார் ஓவேலி அருகே காட்டு யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற சம்பவத்தில் வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.
கூடலுார், ஓவேலி எல்லமலை அருகே லைன்காடு பகுதியில், காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, அங்கு சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த யானை திடீரென வன ஊழியர்கள் சென்ற வாகனத்தை தாக்க முயன்றது. வாகனத்தில் இருந்த வன ஊழியர்கள் ஹாரன் ஒலி எழுப்பியும், சப்தமிட்டனர்; யானை திரும்பி சென்றது. இதனால், வன ஊழியர்கள் உயிர்தப்பினர். இச்சம்பவம் ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.