/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதி மொழி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதி மொழி
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதி மொழி
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதி மொழி
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதி மொழி
ADDED : ஜூன் 13, 2024 11:35 PM
கோத்தகிரி : கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். சோலுார் மட்டம் காவல் நிலைய எஸ்.ஐ.,வேலுசாமி; வக்கீல் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்து, 'குழந்தை தொழிலாளர்கள் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியதுடன், இது சார்ந்து, காவல் துறையும், நீதி துறையும் கல்வித் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்,' என தெரிவித்தனர்.
முன்னதாக, உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் ஏற்று கொண்டனர். தொடர்ந்து, தலைமை ஆசிரியர் 'குருவி' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியர்கள் ராஜேந்திரன், ரெனிதா பிரபாவதி, ரஞ்சிதா உட்பட, மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.