/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா ஊட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ஊட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ஊட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ஊட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2024 12:09 AM

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா தி.மு.க., சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி, ஊட்டியில் நடந்தது.
இதனையொட்டி, ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள, அப்துல் கலாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதியம் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில், ஆதரவற்றோர் மையத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
அதே போல், ஊட்டி நகரம், மஞ்சூர், குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. திரளான தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.