/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விதி மீறல் நடந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை விதி மீறல் நடந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
விதி மீறல் நடந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
விதி மீறல் நடந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
விதி மீறல் நடந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 12:08 AM

ஊட்டி;'பள்ளி வாகன இயக்கத்தில் விதி மீறல் கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., எச்சரித்துள்ளார்.
நீலகிரியில், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், அனைத்து பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் கோத்தகிரி மற்றும் ஊட்டியில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், 'வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப் பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி, ஓட்டுனர் பெயர்வில்லை பொருத்திய உரியசீருடை, படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் ஆவணங்கள்,' உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடு இருந்த வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' கொடுத்து மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
நேற்று, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''பள்ளி வாகனத்தில் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்க வேண்டும்.
அதை பள்ளி நிர்வாகம் தினமும் கண்காணிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் குறைபாடு ஏதாவது இருந்தால் டிரைவர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வாகனத்தில் உதவியாளர் இல்லாமல் செல்ல கூடாது. விதி மீறல் கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.