/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அதிகரித்து வரும் பார்த்தீனியம் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து அதிகரித்து வரும் பார்த்தீனியம் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து
அதிகரித்து வரும் பார்த்தீனியம் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து
அதிகரித்து வரும் பார்த்தீனியம் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து
அதிகரித்து வரும் பார்த்தீனியம் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து
ADDED : ஜூன் 05, 2024 01:03 AM

கூடலுார்;கூடலுார் சாலையோரங்களில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுவாசம் தொடர்பான நோய் பாதிப்பு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
பார்த்தீனியம் விஷ செடிகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும், சுவாசம் தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துகிறது. 'இதனால், அந்த செடிகளை தொடர்ச்சியாக அழித்து கட்டுப்படுத்த வேண்டும்,' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்,கூடலுார் குடியிருப்பை ஒட்டிய சாலை ஓரங்களிலும் தற்போது அதிகளவில் இத்தகைய செடிகள் வளர்ந்துள்ளன. இவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்களையும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பார்த்தீனியம் செடிகள் வளரும் பகுதிகளில், நமக்கு நன்மை தரக்கூடிய பல தாவரங்கள் அழிந்து விடும் ஆபத்து உள்ளது. மேலும், மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் நோய் ஏற்படும். எனவே இந்த செடிகளை வேருடன் அழிக்க வேண்டும்,' என்றனர்.