/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எலக்ட்ரானிக் டெக்னாலஜிக்கல் போர் சகாப்தம் அக்னி வீரர்களுக்கு கமாண்டன்ட் அட்வைஸ் எலக்ட்ரானிக் டெக்னாலஜிக்கல் போர் சகாப்தம் அக்னி வீரர்களுக்கு கமாண்டன்ட் அட்வைஸ்
எலக்ட்ரானிக் டெக்னாலஜிக்கல் போர் சகாப்தம் அக்னி வீரர்களுக்கு கமாண்டன்ட் அட்வைஸ்
எலக்ட்ரானிக் டெக்னாலஜிக்கல் போர் சகாப்தம் அக்னி வீரர்களுக்கு கமாண்டன்ட் அட்வைஸ்
எலக்ட்ரானிக் டெக்னாலஜிக்கல் போர் சகாப்தம் அக்னி வீரர்களுக்கு கமாண்டன்ட் அட்வைஸ்
ADDED : ஜூன் 05, 2024 01:04 AM

குன்னுார்;குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், 3வது குழுவில் 841 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.
குன்னுார் வெலிங்டனில் பழமை வாய்ந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம்.ஆர்.சி.,), இளைஞர்களுக்கு அக்னி வீரர்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
31 வார கடும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 3வது அணியில் 841 அக்னி வீரர்களின் சத்திய பிரமாண நிகழ்ச்சி நேற்று பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் நடந்தது. ராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் தேச பக்தி பாடல்களை இசைக்க, தேசிய கொடி மற்றும் எம்.ஆர்.சி., கொடி கொண்டு வரப்பட்டது.
சிறந்த வீரர்களுக்கு பதக்கம்
வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ், பயிற்சியில் சிறந்து விளங்கிய, 6 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கி பேசியதாவது :
'பாசிங் அவுட் பரேட்' நிகழ்ச்சி, ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான மறக்க முடியாத நிகழ்வு. பாரதத்தில் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ள புகழ்பெற்ற ராணுவ சீருடை கனவு உங்களுக்கு கிடைத்தது பாராட்டுக்குரியது. ராணுவ சேவையை துவங்கும் நீங்கள் ராணுவத்தின் பழமையான, புகழ்பெற்ற படைப்பிரிவின் ஒரு பகுதியாக மாறுவதுடன் நாட்டுக்கு சேவை செய்ய அந்தந்த பட்டாலியன்களில் பணியமர்த்தப்படுவீர்.
தற்போது, ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சி கடினமாக்கப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் செயலில் ஈடுபடும்போது கடினமான சூழ்நிலைகளை எளிதாக எதிர் கொள்ள முடியும். உயர்தர பயிற்சியால் ராணுவத்தின் துணிச்சலான வீரர்கள் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளனர். நவீன போர்களத்தில் நீங்கள் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்வீர்கள். அதற்காக நீங்கள் எப்பொழுதும் உங்களை தயார் நிலையில் வைத்து பயிற்சி பெற வேண்டும்.
தற்போதைய காலத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக்னாலஜிக்கல்' போர் சகாப்தம் என்பதால், வரவிருக்கும் மாற்றத்திற்கு ஏற்ப உங்களை மாற்றியமைக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்தர உடற்பயிற்சி, ஆயுத பயிற்சி, கைவினை மற்றும் போர் பயிற்சி அவசியம்,'' என்றார்.
முன்னதாக, 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பதற்கேற்ப, உப்பு உட்கொண்ட பிறகு, பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக்கொடி மீது ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, அக்னி வீரர்கள் பெற்றோர் உறவினர்களுடன் பங்கேற்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.