/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாலியல் தொல்லை விடுதி காப்பாளர் கைது பாலியல் தொல்லை விடுதி காப்பாளர் கைது
பாலியல் தொல்லை விடுதி காப்பாளர் கைது
பாலியல் தொல்லை விடுதி காப்பாளர் கைது
பாலியல் தொல்லை விடுதி காப்பாளர் கைது
ADDED : ஜூன் 17, 2024 11:43 PM
ஊட்டி:-ஊட்டியில், 15 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின், 15 வயது மகன் ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கியுள்ளார். பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக மாணவன் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது, பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர்டிசில்வா,45, அந்த மாணவனை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி அலிஸ்டர்டிசில்வாவை பணி நீக்கம் செய்தது.
புகாரின் பேரில், ஊட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அலிஸ்டர்டிசில்வாவை கைது செய்தனர்.