ADDED : ஜூன் 17, 2024 11:42 PM
ஊட்டி:ஊட்டியில் நேற்று அரை மணி நேரம் கன மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கி இரு வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மலை காய்கறி, தேயிலை விவசாயிகள் மழை இல்லாததால் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று மதியம், 1:00 மணியளவில் ஊட்டி நகரில் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை வேண்டி சில பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது.