/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி நலத்திட்ட உதவி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 18, 2024 11:12 PM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், 3,127 மாற்றுத்திறனாளிகளுக்கு, 12.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் துறை மூலம், 2021 மே, 7 முதல், இதுவரை, 1,674 மனவளர்ச்சி குன்றியோருக்கு, 7 கோடி ரூபாய், 937 கடும் ஊனமுற்றோருக்கு 3.71 கோடி ரூபாய், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட, 44 நபர்களுக்கு, 18.10 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனம் வளர்ச்சி குன்றியோர், குடும்ப ஊனமுற்றோர் தங்களுடன், ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள மாதந்தோறும், 1,000 ரூபாய்; கூடுதல் பராமரிப்பு உதவி தொகை, 11.68 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தவிர, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட, 14 மாற்று திறனாளிகளுக்கு, 1.77 லட்சம் ரூபாய்; 137 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 4.46 லட்சம் ரூபாய்; கல்வி உதவி,36 பேருக்கு சுய தொழில் தொடங்க வங்கி கடன் மானியம், 7.21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.
மேலும், ஆறு வயதுவரை உள்ள, 22 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 8.82 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆரம்பகால பயிற்சி மையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத, 16 குழந்தைகளுக்கு, 5.02 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
இதை தவிர, பட்டதாரி மாற்றுத்திறனாளியை, நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில், ஏழு பயனாளிகளுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் உள்ள, 34 குழந்தைகளுக்கு, 18.38 லட்சம் ரூபாய் பராமரிப்பு பணி, 90 பேருக்கு, 70.65 லட்சம் ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், மூன்று பேருக்கு, 42 ஆயிரம் ரூபாய், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களுக்கு, 3.78 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டுஉள்ளது.
இரண்டு பேருக்கு ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 3,125 மாற்றுத்திறனாளிகளுக்கு, 12.39 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.