Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்

விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்

விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்

விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்

ADDED : ஜூன் 18, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
குன்னுார்:குன்னுார் அந்தோணியார் திருத்தல, 138வது ஆண்டு திருவிழாவில் விண்கல அலங்காரத்தில் அந்தோணியார் பவனி வந்தார்.

குன்னுாரில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழா நாளில் நடந்த ஆடம்பர திருப்பலி மைசூர் பிஷப் வில்லியம் தலைமையிலும், மலையாளத்தில் திருப்பலி குன்னுார் செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை சேவியர் பாபு தலைமையிலும் நடந்தது.

தொடர்ந்து, விண்கலம் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் பவனி வந்தார். அதில், பங்கு மக்கள் பிரார்த்தனைகள் செய்தும் பாடல்கள் பாடியும் பங்கேற்றனர். இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதரின் திரு சொரூபம் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டது.

அந்தோணியார் திருத்தளத்தில் புறப்பட்ட ஊர்வலம் மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் திருத்தலத்தை அடைந்தது. நற்கருணை ஆசீருடன் விழா நிறைவு பெற்றது. விழாவையொட்டி பலவண்ண விளக்கு அலங்காரங்களில் திருத்தலம் வண்ணமயமாக காட்சியளித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us