/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
ADDED : ஜூன் 23, 2024 11:21 PM
ஊட்டி;ஊட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், தோட்டக்கலை இணை இயக்குனர் தலைமையிலும், தேயிலை வாரியம் மூலமாகவும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.
அதில், தேயிலை தரம் பொறுத்து விலை நிர்ணயம் செய்வது குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், வேளாண் பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறையும் இணைந்து, 'இ- வாடகை செயலி' மூலம், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், 'உழவர் செயலி' மூலம், விவசாயிகள் எளிதாக அரசு திட்டங்களை பெற்று பயன் பெறலாம். விவசாயம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
வேளான் பொறியியல் துறை மூலம், தேயிலை அறுவடை எந்திரம் வழங்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதில், அரசு அலுவலர்கள், விவசாய சங்கங்களில் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.