/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் ஊழியர் ஸ்டிரைக்; 30 பேர் பங்கேற்பு மின் ஊழியர் ஸ்டிரைக்; 30 பேர் பங்கேற்பு
மின் ஊழியர் ஸ்டிரைக்; 30 பேர் பங்கேற்பு
மின் ஊழியர் ஸ்டிரைக்; 30 பேர் பங்கேற்பு
மின் ஊழியர் ஸ்டிரைக்; 30 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 10, 2024 01:36 AM
அன்னுார்:தமிழ்நாடு மின் ஊழியர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்தில், அன்னுாரில் 30 பேர் பங்கேற்றனர்.
மின்வாரியத்தில், 75 ஆயிரம் நிரந்தர பணியாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களும், 6000 பகுதி நேர ஊழியர்களும் பணி புரிகின்றனர். 2 கோடியே 30 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர்.
மின்வாரியத்தில் உள்ள பல ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் ஊழியர்களை நியமிக்க கூடாது.
நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2011 டிசம்பர் முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 9ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டமும் நடத்துவதாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) அறிவித்தது.
அன்னுார் வட்டாரத்தில், அன்னுாரில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகமும், அன்னுார், வடக்கலுார், பசூர், பொகலூர், கரியாம்பாளையம், கணேசபுரம் மற்றும் செட்டிபாளையத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்களும் உள்ளன.
இதில் களப்பணியாளர்கள், கேங்மேன், அலுவலக ஊழியர்கள் என 30 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
உதவி பொறியாளர்கள் கூறுகையில், 'வேலை நிறுத்தத்தால் மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை,' என்றனர்.