/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்க்கை அரசு பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்க்கை
அரசு பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்க்கை
அரசு பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்க்கை
அரசு பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்க்கை
ADDED : ஜூலை 10, 2024 01:37 AM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 643 பேர் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 5,000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டுக்கு, மூன்று மாதங்களுக்கு முன்பே மாணவர் சேர்க்கை துவங்கியது.
விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு, பள்ளி வயது குழந்தைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 91 அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டில் முதல் வகுப்பில் 643 பேர் சேர்ந்துள்ளனர். இரண்டாம் வகுப்பில் 547 பேர், மூன்றாம் வகுப்பில் 677 பேர், நான்காம் வகுப்பில் 713 பேர், ஐந்தாம் வகுப்பில் 705 பேர், சேர்ந்துள்ளனர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கூடவும் இல்லை; குறையவும் இல்லை. ஒரே அளவில் உள்ளது.
எனினும், துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருவதாலும், அரசின் மாணவ மாணவியருக்கான புதிய நலத்திட்டங்களால் வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.