/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க கோரிக்கை பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க கோரிக்கை
பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க கோரிக்கை
பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க கோரிக்கை
பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 10:31 PM
பெ.நா.பாளையம், - பன்னிமடை ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பன்னிமடை ஊராட்சியை தொடர்ந்து கிராம ஊராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்., தலைவர் மோகன்ராஜ், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில், பன்னிடை கிராமம் விவசாயம் நிறைந்த பகுதி. மலையும், மலை சார்ந்த பகுதியாக உள்ளதால், இங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் சுமார், 300 குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.
மேலும், மத்திய, மாநில அரசு கிராமப்புற திட்டங்களால் பன்னிமடை ஊராட்சி பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். எனவே, பன்னிமடை ஊராட்சியை தொடர்ந்து கிராம ஊராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மேலும், நிர்வாக வசதிக்காக பன்னிமடை ஊராட்சியை பன்னிமடை, கணுவாய் என, இரண்டு ஊராட்சியாக பிரித்து, செயல்பட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.