/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூலை 10, 2024 10:32 PM

அன்னுார்,- ரிசர்வ் சைட்டுகளில் வள மீட்பு பூங்கா அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயகுமார் செயல் அலுவலர் (பொறுப்பு) பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர்.
குப்பைகளை பரவலாக்கி, உரம் தயாரிக்க பேரூராட்சி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி 15 வார்டுகளிலும் பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட்டுகளில் கொட்டகை அமைத்து மக்கும் குப்பையில்இருந்து உரம் தயாரித்தல், பேரூராட்சியில் அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு வைத்துள்ளவர்கள் 15 நாட்களுக்குள் வரன்முறை செய்து கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ஐந்து முதல் பதினைந்து சதவீதம் வரை வாடகை உயர்த்தி மீண்டும் ஏற்கனவே உள்ளவர்களுக்கு ஒதுக்குவது என 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இரண்டு 'லே அவுட்' கள் கழிவுநீர் வெளியேறுவதற்கு உரிய வசதி செய்யாததால் அவற்றுக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பா.ஜ., கவுன்சிலர் அங்காத்தாள் பேசுகையில், பழுதான தெருவிளக்குகளை மாற்ற நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் மாதக்கணக்கில் தாமதம் செய்கிறது. சண்முகா நகரில் புதிய குடிநீர் இணைப்பு கோரி பல மாதங்களாக காத்திருக்கின்றனர், என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் காஞ்சனா பேசுகையில், 'குரங்குகள் தொல்லையால் சிலர் வீடுகளை காலி செய்து விட்டு செல்கின்றனர். குரங்குகளை கட்டுப்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது' என்றார்.
கவுன்சிலர்கள் பேசுகையில்,'குடிநீர் வினியோகம் தாமதமாகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும், வளர்ச்சிப் பணிகளை வேகமாக செய்ய வேண்டும்.' என்றனர்.
தலைமை எழுத்தர் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.