/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை பிரச்னை எதிரொலி: 'கும்கி' வரவழைக்க முடிவு யானை பிரச்னை எதிரொலி: 'கும்கி' வரவழைக்க முடிவு
யானை பிரச்னை எதிரொலி: 'கும்கி' வரவழைக்க முடிவு
யானை பிரச்னை எதிரொலி: 'கும்கி' வரவழைக்க முடிவு
யானை பிரச்னை எதிரொலி: 'கும்கி' வரவழைக்க முடிவு
ADDED : ஜூலை 05, 2024 01:43 AM
கூடலுார்;கூடலுார் அருகே குடியிருப்பு பகுதியில் முகமிட்டு மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட கோரி மக்கள் சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் தேவர்சோலை கல்லிங்கரை, குச்சிமுச்சி, கவுண்டங்கொல்லி குடியிருப்பு பகுதிகளில், இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டினாலும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை.
அதிருப்தி அடைந்த மக்கள், காட்டு யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி, 4வது மைல், தேவர்சோலை சாலையோரம், நிழல்குடை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத் தலைவர் யுனுஸ்பாபு மற்றும் வருவாய்த் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் தரப்பில், 'இரு நாட்களுக்கு முன்பு யானை தாக்கி சிகிச்சையில் உள்ள, கவுண்டங்கொல்லியை சேர்ந்த குட்டன், கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, வனத்துறை சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும்; கிராம மக்களை அச்சுறுத்தி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலையிலிருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகள் விரட்டப்படும்,' என்றனர். மக்கள் கலைந்து சென்றனர்.