Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேவர்சோலை சாலையில் மரம் விழுந்து பாதிப்பு

தேவர்சோலை சாலையில் மரம் விழுந்து பாதிப்பு

தேவர்சோலை சாலையில் மரம் விழுந்து பாதிப்பு

தேவர்சோலை சாலையில் மரம் விழுந்து பாதிப்பு

ADDED : ஜூன் 27, 2024 09:28 PM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அருகே, சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையில், 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதமடைந்தன. பெரிதும் சிறிதுமாக,17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. காற்றில், 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.

பருவ மழையின் பொது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடு உடன் மாற்றிடம் வழங்கப்பட்டதால், கூடலுாரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.

இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை நுழைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்ததால் நிம்மதி அடைந்தனர். கள்ளங்கரை கம்பாடி அருகே, நேற்று முன்தினம், இரவு, 8:30 மணிக்கு பிஜு என்பவர் வீட்டின் மீது ஈட்டி மரம் விழுந்தது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. செம்பாலா பகுதியில், ஷாஜி என்பவரின் வீட்டின் மீது இரவு 10:15 மணிக்கு மரம் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அகற்றினர்.

கூடலுார் தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, மரம் விழுந்து கூடலுார், கேரளா வயநாடு மாவட்டத்திற்கு இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர். மழை தொடர்வதால் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us