/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிலிண்டர் லாரி - கார் மோதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு சிலிண்டர் லாரி - கார் மோதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
சிலிண்டர் லாரி - கார் மோதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
சிலிண்டர் லாரி - கார் மோதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
சிலிண்டர் லாரி - கார் மோதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 05:23 AM

பந்தலுார், : பந்தலுார் அருகே சிலிண்டர் லாரி-கார் மோதிய விபத்தால், இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நடுவட்டம் பகுதியை சேர்ந்த தனியார் காஸ் ஏஜன்சி மூலம் சமையல் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மாலை சிலிண்டர் வினியோகம் முடித்து, நடுவட்டத்திற்கு சிலிண்டர் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து பந்தலுார் நோக்கி கார் ஒன்று வந்துள்ளது.
அப்போது, நீர்மட்டம் என்ற இடத்தில் வளைவான பகுதியில் வந்த போது, லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. காரில் பயணித்த ஒரு குழந்தை உள்ளிட்ட இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதனால், தமிழகம், கேரளா செல்லும் வாகனங்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன. விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.