/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பராமரிக்காமல் விடப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்கா பராமரிக்காமல் விடப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்கா
பராமரிக்காமல் விடப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்கா
பராமரிக்காமல் விடப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்கா
பராமரிக்காமல் விடப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்கா
ADDED : ஜூன் 20, 2024 05:34 AM
ஊட்டி, : ஊட்டி பஸ் ஸ்டாண்டில் பராமரிக்காமல் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவை சீரமைக்க வேண்டும்.
ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே அம்பேத்கர் நினைவு பூங்கா உள்ளது. ஊட்டி நகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
நகரின் முக்கிய பகுதியில் இந்த பூங்கா இருப்பதால் ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பூங்காவின் நிலையை கண்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இதனை சீரமைத்து பொலிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.