/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அழகான தமிழ் கையெழுத்து மாணவர்களுக்கு போட்டி அழகான தமிழ் கையெழுத்து மாணவர்களுக்கு போட்டி
அழகான தமிழ் கையெழுத்து மாணவர்களுக்கு போட்டி
அழகான தமிழ் கையெழுத்து மாணவர்களுக்கு போட்டி
அழகான தமிழ் கையெழுத்து மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூலை 19, 2024 11:47 PM
பெ.நா.பாளையம்:பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டி நடத்தப்பட்டு, ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதுவோரை ஊக்குவிக்கவும், அதன் அடிப்படையில் பிற மாணவர்கள், தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக, 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 2000 ரூபாய், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய், இதே போல, 10 முதல் பிளஸ், 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 4000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், 3ம் பரிசாக, 2000 ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் இம்மாதம், 31ம் தேதிக்குள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன'என்றனர்.