Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ADDED : ஜூலை 19, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
-நிருபர் குழு-

ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னுார் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்னுார் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவிலில், நேற்று அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஓதிமலை ரோட்டில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.

அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு பால், தயிர், நெய், உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது.

அன்னுார் சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், குருக்கம்பாளையம், கணேசபுரம், குன்னத்துார் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், கணியூர் மாகாளியம்மன் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மேட்டுப்பாளையம் காட்டூர் ஜெகநாதன் லே அவுட் தவிட்டு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, மாதுளை, அன்னாசி, வாழை உள்பட பல்வேறு பழங்களில், அலங்காரம் செய்தனர்.

மகாதேவபுரம், கிருஷ்ணசாமி லே அவுட் விளையாட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சுமங்கலி பூஜை


மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதுார், மந்தை மாரியம்மன் கோவிலில் பன்னிரண்டாம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் அன்னை வேள்வி வழிபாடுடன் சுமங்கலி பூஜை துவங்கியது. 12:00 மணிக்கு அன்னைக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது. 12:00 மணிக்கு அலங்கார ஆராதனையும், பேரொளி வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது. அர்ச்சகர்கள் நாராயணன், கண்ணன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி சரடு, வளையல் ஆகியவை பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us