/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கார்--ஜீப் மோதி விபத்து போலீசார் விசாரணை கார்--ஜீப் மோதி விபத்து போலீசார் விசாரணை
கார்--ஜீப் மோதி விபத்து போலீசார் விசாரணை
கார்--ஜீப் மோதி விபத்து போலீசார் விசாரணை
கார்--ஜீப் மோதி விபத்து போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 11, 2024 01:37 AM

ஊட்டி;ஊட்டி பைன் பாரஸ்ட் அருகே கார்- ஜீப் விபத்துக்குள்ளானதில் பலர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ஊட்டியில் இருந்து பைக்காரா நோக்கி ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. பைன் பாரஸ்ட் அருகில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திய போது, ஜீப் எதிரில் வந்த கர்நாடகா மாநில கார் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், ஜீப் சாலையில் கவிழ்ந்தது. கார் தலை கீழாக சாலையோரம் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான வாகனங்கள் மீட்கப்பட்டன. புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.