/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கல்வி உதவி தொகை கிடைக்காமல் சிரமப்படும் பழங்குடியின மாணவி கல்வி உதவி தொகை கிடைக்காமல் சிரமப்படும் பழங்குடியின மாணவி
கல்வி உதவி தொகை கிடைக்காமல் சிரமப்படும் பழங்குடியின மாணவி
கல்வி உதவி தொகை கிடைக்காமல் சிரமப்படும் பழங்குடியின மாணவி
கல்வி உதவி தொகை கிடைக்காமல் சிரமப்படும் பழங்குடியின மாணவி
ADDED : ஜூன் 11, 2024 01:41 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே பட்டதாரியான பழங்குடியின மாணவி கல்வி உதவி தொகை இதுவரை கிடைக்காததால் அவதிப்பட்டு வருகிறார்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பன்னிக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்திரன் -அம்மினி. இவர்களின் மகள் அஞ்சுஷா. இவர் தற்போது ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பி.ஏ., பட்டப்படிப்பு முடித்து சத்தியமங்கலத்தில் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார்.
காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்த மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், மாணவி படிப்பதற்கு கல்வி உதவி தொகை கோரி பலமுறை விண்ணப்பித்தும், இவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியினர் மாணவிகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதே அரிதாக உள்ள நிலையில்,இந்த மாணவி பட்டப்படிப்பு முடித்து பின்னர் ஆசிரியர் பயிற்சி படித்து வருவதால், முதல் பட்டதாரி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகிறது.
மாணவி அஞ்சுஷா கூறுகையில், ''எனது தாய் தந்தையர் கூலி வேலைக்கு சென்றாலும் நான் பட்டப்படிப்பு முடித்து தற்போது ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறேன். தொடர்ந்து எம்.ஏ., படித்து, ஆராய்ச்சி படிப்பும் நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது.
ஆனால், கல்லுாரி மற்றும் ஆசிரிய பயிற்சிக்கான கல்வி உதவித் தொகை கோரி பலமுறை விண்ணப்பித்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முதல் பட்டதாரி சான்றிதழும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே அதிகாரிகள் எனது கல்வி தொடர உதவி செய்ய வேண்டும்,'' என்றார்