மின்சாரம் தாக்கி கன்று குட்டி பலி
மின்சாரம் தாக்கி கன்று குட்டி பலி
மின்சாரம் தாக்கி கன்று குட்டி பலி
ADDED : ஜூலை 23, 2024 01:53 AM
அன்னுார்:அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் சோமு, விவசாயி. இவருக்கு சொந்தமான கன்று குட்டி நேற்று மாலை கஞ்சப்பள்ளியில் குளத்துப்பாளையம் ரோட்டில் மேய்ந்து கொண்டிருந்தது.
அங்கு சாலை ஓரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஸ்டே கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இந்த கம்பி மீது கன்று குட்டி உரசிய அடுத்த நிமிடம் உயிரிழந்தது.
தகவல் அறிந்து அன்னூர் மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை துண்டித்து ஆய்வு செய்தனர்.