/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஒப்பந்த கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆப்சென்ட் ஒப்பந்த கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆப்சென்ட்
ஒப்பந்த கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆப்சென்ட்
ஒப்பந்த கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆப்சென்ட்
ஒப்பந்த கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆப்சென்ட்
ADDED : ஜூலை 23, 2024 01:54 AM
சோமனூர்;கூலி உயர்வு பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால், கூட்டம் அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. இதில், லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வு பெற்று தர வேண்டும், என, இரு மாவட்ட நிர்வாகங்களிடம் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஐந்து மாதமாக பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை.
இதையடுத்து கூட்டமைப்பினர், கலெக்டர்களிடம் நினைவூட்டல் மனு அளித்தனர்.இதையடுத்து, விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். நேற்று தொழிலாளர் நல துறை அலுவலகத்தில், உதவி கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில், அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலூர் தலைவர் பொன்னுசாமி, பெருமாநல்லூர் செயலாளர் துரைசாமி, சோமனூர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதனால், எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வரும், ஆக., 7 ம்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என, அதிகாரிகள் முடிவு செய்து அறிவித்தனர்.