/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிம்ஸ் பூங்காவில் பூத்த கோப்ரா லில்லி மலர்கள் சிம்ஸ் பூங்காவில் பூத்த கோப்ரா லில்லி மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் பூத்த கோப்ரா லில்லி மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் பூத்த கோப்ரா லில்லி மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் பூத்த கோப்ரா லில்லி மலர்கள்
ADDED : ஜூன் 13, 2024 11:31 PM

குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள 'கோப்ரா' லில்லி மலர்கள் சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு வளர்க்கும் மலர் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரி பூந்தொட்டியில் வளர்க்கப்பட்ட 'கோப்ரா லில்லி' மலர் தற்போது பூத்து குலுங்குகிறது.
'அரிசெமா டார்டுயூசம்' தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர் செடி தனித்துவமான மஞ்சள், ஊதா அல்லது பச்சை நிறத்தில் பூத்து பாம்பின் நாக்கை போன்று உள்ளது. பார்ப்பதற்கு கோப்ரா போன்று இருப்பதால் கோப்ரா லில்லி எனவும் அழைக்கப்படுகிறது.
சிம்ஸ் பூங்கா வரும் சுற்றுலா பயணிகளை இந்த மலர்கள் வசீகரித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், 'வற்றாத மூலிகை தாவரமான இந்த மலர் செடி ஜப்பானில் வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.
இதன் கிழங்கு புண்கள் ஆற பயன்படுத்தப்படுகிறது. தற்போது சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்பட்ட முதன் முறையாக பூத்துக் குலுங்குகிறது,'என்றனர்.