/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழை தொடருவதால் 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகின மழை தொடருவதால் 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகின
மழை தொடருவதால் 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகின
மழை தொடருவதால் 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகின
மழை தொடருவதால் 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகின
ADDED : ஜூன் 13, 2024 11:32 PM

ஊட்டி : ஊட்டியில் பரவலாக பெய்து வரும் மழைக்கு, 10 ஆயிரம் ரோஜா செடிகள் அழுகியுள்ளன.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுதோறும் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ரோஜா கண்காட்சிக்காக, 4,000 வகைகளில், 38 ஆயிரம் ரோஜா செடிகள் தயார் செய்யப்பட்டது.
ரோஜா கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ரோஜா கண்காட்சி முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக பெய்து வரும் மழைக்கு, 10 ஆயிரம்மலர் செடிகள் அழுகி காய்ந்து போய் உள்ளன. அழுகிய மலர் செடிகளை புரூனிங் செய்து மலர்களை பராமரிக்க போவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலர்களை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.