/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சேதமடைந்த சாலை சீரமைக்க எதிர்ப்பார்ப்பு சேதமடைந்த சாலை சீரமைக்க எதிர்ப்பார்ப்பு
சேதமடைந்த சாலை சீரமைக்க எதிர்ப்பார்ப்பு
சேதமடைந்த சாலை சீரமைக்க எதிர்ப்பார்ப்பு
சேதமடைந்த சாலை சீரமைக்க எதிர்ப்பார்ப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:26 AM

கூடலுார்;கூடலுார் அருகே, சேதமடைந்துள்ள பாண்டியார் டான்டீ சாலையை சீரமைத்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் பாண்டியார் குடோனிலிருந்து, டான்டீ வழியாக செல்லும் சாலை, தேவாலா அட்டி சாலையுடன் இணைகிறது. இச்சாலையில், குடோன் முதல் அங்குள்ள முருகன் கோவில் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தேவாலா அட்டி சாலையை இணைக்கும் இடம் வரை, சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'இங்கு மிகவும் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.