/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விவசாயம் செய்ய அனுமதி தேவை; கோத்தர் பழங்குடியின மக்கள் மனு விவசாயம் செய்ய அனுமதி தேவை; கோத்தர் பழங்குடியின மக்கள் மனு
விவசாயம் செய்ய அனுமதி தேவை; கோத்தர் பழங்குடியின மக்கள் மனு
விவசாயம் செய்ய அனுமதி தேவை; கோத்தர் பழங்குடியின மக்கள் மனு
விவசாயம் செய்ய அனுமதி தேவை; கோத்தர் பழங்குடியின மக்கள் மனு
ADDED : ஜூலை 10, 2024 12:26 AM
ஊட்டி;ஊட்டி அருகே, சோலுார் கோக்கால் பகுதி கோத்தர் பழங்குடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்குடி இன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1,800 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டது. இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டது.
இதன்படி பழங்குடி இன மக்களாகிய நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். விவசாயத்தை ஒட்டிய கால்நடை வளர்ப்புக்கும் இந்த இடம் எங்களுக்கு சவுகரியமாக இருந்தது. ஆண்டாண்டு காலமாக எங்கள் குலத்தொழில் அழியாமல் காக்கப்பட்டது.
இந்நிலையில், 'கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டுமே அழைத்து வரவேண்டும்' என, வனத்துறையினர் நிர்பந்திக்கின்றனர். இதனால் எங்கள் குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆங்கிலேயர் காலத்தில் ஒதுக்கியுள்ள 1,800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வனத்துறையினர் இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.