/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடைபாதையில் ஏ.டி.எம்., வாகனம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி நடைபாதையில் ஏ.டி.எம்., வாகனம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
நடைபாதையில் ஏ.டி.எம்., வாகனம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
நடைபாதையில் ஏ.டி.எம்., வாகனம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
நடைபாதையில் ஏ.டி.எம்., வாகனம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 20, 2024 05:16 AM
ஊட்டி, : 'ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதை முன் நிறுத்தப்பட்ட ஏ.டி.எம்., வாகனத்தை பிற சுற்றுலா மையங்களுக்கும் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை பார்வையிட சீசன், வாரநாட்கள் மற்றும் பிற நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் அருகே நடைபாதை முன் ஏ.டி.எம்., வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனத்தை சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'இந்த ஏ.டி.எம்., வாகனத்தை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட பிற சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் இயக்க வேண்டும்,' என்றனர்.