நீலகிரி மலை ரயில் 125வது ஆண்டு விழா
நீலகிரி மலை ரயில் 125வது ஆண்டு விழா
நீலகிரி மலை ரயில் 125வது ஆண்டு விழா
ADDED : ஜூன் 12, 2024 09:43 PM
குன்னுார்,- நீலகிரி மலை ரயிலின், 125வது ஆண்டு விழா வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கடந்த 1854ல், நீலகிரி மலை பகுதிக்கு மலை ரயில் பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1871 ல் நீலகிரி ரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1876 ல் மலை ரயிலுக்காக சுவிட்சர்லாந்து 'ரிகன்பாக்ரேக்' அமைப்பின் கண்டுபிடிப்பாளரான நிக்லாஸ் ரிகன் பாக் என்.எம்.ஆரை உருவாக்க வந்தார்.
1891 ல் திட்ட பணிகள் துவங்கியது. 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் முடிந்து, 1898ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டது.1899 ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி, 125வது ஆண்டு விழா வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும், இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மலை ரயிலுக்கு, கடந்த, 2005, ஜூலை 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து, 19வது ஆண்டு விழா, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் குன்னுாரில் கொண்டாடப்படுகிறது.