ADDED : ஜூன் 10, 2025 01:34 AM
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தம்பதியரின், மூன்றரை வயது மகள். இவர்கள் பணிக்கு செல்லும்போது, குழந்தையை பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பாலு, 24, என்பவரிடம் கவனித்துக்கொள்ள விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 7ல் குழந்தையை வாலிபரிடம் விட்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதையறிந்த பெற்றோர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோவில் வாலிபர் பாலுவை கைது செய்தனர்.