/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி
உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி
உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி
உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 09, 2025 02:07 AM
நாமக்கல், இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி தின விழாவை கொண்டாடும் வகையில், நேற்று காலை, 'ஆரோக்கியம் நிறைந்த முதுமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இயன்முறை மருத்துவர் கவியரசு தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்த விழிப்புணர் பேரணி, மோகனுார் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, ஸ்டேட் பேங்க், திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக மீண்டும் பழைய அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது. இயன்முறை மருத்துவர் சங்க நிர்வாகிகள் நந்தகுமார், ராஜகோபால், புவியரசு, பிரதீப்ஸ்டாலின், சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.