ADDED : செப் 09, 2025 02:06 AM
குமாரபாளையம், குமாரபாளையத்தில், அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு முன்பாக, அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகர் உள்ளிட்ட போலீசார், சேலம் சாலை, பங்களா எதிரே உள்ள பார் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த மணிகண்டன், 33, என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.