/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டும் பணி மும்முரம் ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டும் பணி மும்முரம்
ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டும் பணி மும்முரம்
ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டும் பணி மும்முரம்
ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டும் பணி மும்முரம்
ADDED : செப் 21, 2025 12:56 AM
ராசிபுரம் :தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் படங்களை மாட்டலாம் என, அரசாணை உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் பிரதமர் படத்தை மாட்ட மறுத்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில், பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இந்நிலையில் ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன் தலைமையில் தொண்டர்கள், முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே, பிரதமர் மோடி படத்தை மாட்டினர்.
இதேபோல் நேற்று நாமகிரிப்பே்டை ஒன்றியம், மூலக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி ஊராட்சி அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்தை, பா.ஜ., நிர்வாகிகள் மாட்டினர்.