/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கைது வெட்டு கத்தி, மோட்டார் பைக் பறிமுதல் கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கைது வெட்டு கத்தி, மோட்டார் பைக் பறிமுதல்
கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கைது வெட்டு கத்தி, மோட்டார் பைக் பறிமுதல்
கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கைது வெட்டு கத்தி, மோட்டார் பைக் பறிமுதல்
கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கைது வெட்டு கத்தி, மோட்டார் பைக் பறிமுதல்
ADDED : செப் 21, 2025 12:56 AM
நாமக்கல் :வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக காத்திருந்த, ஐந்து பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, சூரி கத்தி, வெட்டு கத்தியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல், திருச்சி சாலை ரமேஷ் தியேட்டர் அருகே மேம்பாலத்தின் அடியில், நேற்று மாலை, 3:00 மணிக்கு சட்ட விரோதமாக, ஐந்து பேர் இருப்பதாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ., பாலுசாமி தலைமையில், போலீசார் மணிகண்டன், யுவராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திகேயன் (எ) பட்டறை மேடு கார்த்தி, 23, பழங்குற்றவாளியான தில்லைபுரம் புருசோத்தமன், 24, என்.கொசவம்பட்டி அருண்குமார், 23, என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரம் கோகுல்ராஜ், 22, அருள்
பிரகாஷ், 19, என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, கார்த்தியிடம் விசாரணை நடத்தியதில், திருச்சி ரோடு, ஆண்டவர் நகரில்,
ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இரண்டு, மூன்று வீடுகளில் கொள்ளை அடிப்பதற்காக திட்டமிட்டு, அதற்காக ஒன்று கூடியதும், கொள்ளையடிக்கும்போது யாராவது இருந்தால், அவர்களை மிரட்டுவதற்காக சூரி கத்தி, வெட்டு கத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சூரி கத்தி, வெட்டு கத்தியையும், திருட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த இரண்டு ேஹாண்டா பைக்கையும்
பறிமுதல் செய்தனர்.