/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெண்களுக்கான உரிமை போலீசார் விழிப்புணர்வுபெண்களுக்கான உரிமை போலீசார் விழிப்புணர்வு
பெண்களுக்கான உரிமை போலீசார் விழிப்புணர்வு
பெண்களுக்கான உரிமை போலீசார் விழிப்புணர்வு
பெண்களுக்கான உரிமை போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில் உள்ள தனியார் கல்லுாரியில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த கருத்தரங்கு, நேற்று நடந்தது.
செயலாளர் டேனிஸ் பொன்னையா முன்னிலை வகித்தார். பேளுக்குறிச்சி எஸ்.ஐ., சந்தியா, ராசிபுரம் எஸ்.ஐ., மாதேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், எஸ்.ஐ., சந்தியா, 'தற்போது நடக்கும் சைபர் கிரைமால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். அதிலிருந்து பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்' என்பது குறித்து விரிவாக பேசினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், சமுதாயத்தில் பெண்களுக்கான வாய்ப்புகள், வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்தும், எஸ்.ஐ., மாதேஸ்வரி பேசினார். முதல்வர் ஜோஸ்பின் டெய்சி வரவேற்றார். தொடர்ந்து,, மாணவியரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.