/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'மலைப்பகுதி டவுன் பஸ்களில் இனி கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம்''மலைப்பகுதி டவுன் பஸ்களில் இனி கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம்'
'மலைப்பகுதி டவுன் பஸ்களில் இனி கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம்'
'மலைப்பகுதி டவுன் பஸ்களில் இனி கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம்'
'மலைப்பகுதி டவுன் பஸ்களில் இனி கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம்'
ADDED : பிப் 25, 2024 03:32 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும், மலைப்பகுதிகளில் இயங்குகின்ற பஸ்களை, அரசு டவுன் பஸ்களாக இயக்குவதற்கும், அதில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கும் முதல்வர் ஆணை வழங்கி இருக்கிறார். அதன்படி, நாளை (இன்று) உதகமண்டலத்தில் துவக்கி வைக்கப்படுகிறது,'' என, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
நாமக்கல்லில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லா பயணம் மேற்கொள்கின்றனர். மலைப்பகுதிகளை பொருத்தவரை, டவுன் பஸ்கள் இதுவரை இயங்கவில்லை. முதல்வரிடம் இந்த கோரிக்கையை எடுத்து வைத்தோம். அதை அவர் ஏற்றுக் கொண்டு, இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழகம் முழுவதும் மலைப்பகுதிகளில் இயங்குகின்ற பஸ்களை, அரசு டவுன் பஸ்களாக இயக்குவதற்கும், அதில் மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கும் ஆணை வழங்கி இருக்கிறார்.
நாளை (இன்று) உதகமண்டலத்தில் துவக்கி வைக்கிறோம். அதையடுத்து, மற்ற பகுதிகளில் படிப்படியாக நடைமுறைக்கு வரும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 635 பேருக்கு எழுத்து தேர்வு முடிந்து, நேர்காணல் நடந்துள்ளது. மற்ற போக்குவரத்து கழகத்தில், ஆள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைக்கு பின் அப்பணிகள் தொடங்கும். 500 மின்சார பஸ் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, 100 பஸ்கள் சென்னையில் இயக்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. புதிய டிரைவர், கண்டக்டர் எடுப்பதற்கான பணிகளை துவக்கி இருக்கிறோம். அரசு பஸ்களில் இறைச்சி ஏற்றி செல்ல எந்த தடையும் இல்லை. அரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக ௫ நிமிடத்தில் டிரைவர், கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் உடனிருந்தனர்.