Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மாங்கூழ் தயாரிப்பு ஆலை செயல்படுமா?

மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மாங்கூழ் தயாரிப்பு ஆலை செயல்படுமா?

மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மாங்கூழ் தயாரிப்பு ஆலை செயல்படுமா?

மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மாங்கூழ் தயாரிப்பு ஆலை செயல்படுமா?

ADDED : ஜூன் 02, 2025 06:42 AM


Google News
நாமக்கல்: 'மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில், விவசாயிகள் அதிகளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். 2024ல், பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், நடப்பாண்டு, மாங்காய் விளைச்சல் நன்றாக உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள், ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் இருந்து, மாங்காய் வரத்து துவங்கப்பட்ட நாள் முதல், மாங்காய் கொள்முதல் செய்து மாங்கூழ் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர்.

ஆனால், இந்தாண்டு மாங்காய்

விளைச்சல் இருந்தும், மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் இதுவரை இயங்கவில்லை. அதனால், நல்ல விளைச்சல் உள்ள செந்துாரா, பங்கனப்பள்ளி

மாங்காய், ஒரு டன் 5,000 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்படியான

விலை இல்லாததால், மாங்காய் அறுவடை செய்யாமல் மரத்திலேயே பழுத்து கொட்டுகின்றன. 2024ல் மாங்காய் ஒரு டன், 22,000 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு மாங்கூல் தயாரிக்கும் தனியார் ஆலைகள் செயல்படாததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கிறது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, முதல்வர் ஸ்டாலின், மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலை உரிமையாளர்கள், விவாயிகள், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us